மிக்ஸியில் போடும் ஜூஸ் நல்லதா?

rajasulochana
Participant
Posted on June 29, 2020 at 11:25 pm

நிச்சயமாக இல்லை. ஏன் என்றால், மிக்ஸியில்வேகமாகச் சுழலும் பொது அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இது நீங்கள் பழச்சாறு செய்யும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள சில நொதிகளை அழிக்கிறது. மேலும் அந்த சூடு, ஊட்டச்சத்துக்களை ஆக்சிஜனேற்றம் (oxidizes ) செய்கிறது. இவற்றால் நீங்கள் போடும் ஜூஸ் குறைவான சத்துக்களை மட்டுமே கொடுக்கிறது.

வேறு என்ன பண்ணலாம்?

நீங்கள் ஜூஸ் போட விரும்பினால், குளிர் பிரஸ் ஜூசர்ஸ் (Cold Press Juicers ) உபயோக படுத்துங்கள். இந்த புதிய ஜூஸர்கள் பழச்சாறுகளை முதலில் நசுக்கி, பின்னர் பழங்களையும் காய்கறிகளையும் அழுத்துவதன் மூலம் சாற்றைப் பிரித்தெடுக்கின்றன. அவை அதிக வெப்பத்தை உற்பத்தி செய்யாததால், அவை புதிய பொருட்களின் ஊட்டச்சத்துக்களை அப்படியே வைத்திருக்கின்றன. மேலும் இது சக்கை மற்றும் பழச்சாறு தனித்தனியே பிரித்து எடுத்துவிடுகிறது.

  • You must be logged in to reply to this topic.
RegisterLost Password
Username
Password
Confirm Password
Email
Username or email