rajasulochana

  • Last visit: 3 days ago
  • Member since: 27 June 2020
  • Profile views: 92
Send private message to rajasulochana
Press Ctrl + Enter to send the message.
In reply to: Healthy Cooking
rajasulochana
Participant
Posted on June 29, 2020 at 11:25 pm

நிச்சயமாக இல்லை. ஏன் என்றால், மிக்ஸியில்வேகமாகச் சுழலும் பொது அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இது நீங்கள் பழச்சாறு செய்யும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள சில நொதிகளை அழிக்கிறது. மேலும் அந்த சூடு, ஊட்டச்சத்துக்களை ஆக்சிஜனேற்றம் (oxidizes ) செய்கிறது. இவற்றால் நீங்கள் போடும் ஜூஸ் குறைவான சத்துக்களை மட்டுமே கொடுக்கிறது.

வேறு என்ன பண்ணலாம்?

நீங்கள் ஜூஸ் போட விரும்பினால், குளிர் பிரஸ் ஜூசர்ஸ் (Cold Press Juicers ) உபயோக படுத்துங்கள். இந்த புதிய ஜூஸர்கள் பழச்சாறுகளை முதலில் நசுக்கி, பின்னர் பழங்களையும் காய்கறிகளையும் அழுத்துவதன் மூலம் சாற்றைப் பிரித்தெடுக்கின்றன. அவை அதிக வெப்பத்தை உற்பத்தி செய்யாததால், அவை புதிய பொருட்களின் ஊட்டச்சத்துக்களை அப்படியே வைத்திருக்கின்றன. மேலும் இது சக்கை மற்றும் பழச்சாறு தனித்தனியே பிரித்து எடுத்துவிடுகிறது.

In reply to: Healthy Cooking
rajasulochana
Participant
Posted on June 27, 2020 at 9:58 pm

சர்க்கரை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஏன் இனிப்பு பலகாரத்தில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்க்கக்கூடாது?

சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்க்கலாம், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்க்கும்போது சுவை குறைவாக தான் இருக்கும். சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லம் பற்றிய நல்ல விஷயங்களை விவரிக்கும் சில புள்ளிகள் இங்கே.

வெல்லம் முக்கியமாக சுக்ரோஸ், தாது உப்புக்கள், இரும்பு மற்றும் சில நார் சத்து ஆகியவற்றால் ஆனது. எனவே, இரும்புச்சத்து குறைபாடுள்ள, இரத்த சோகை ஏற்பட்டால் வெல்லம் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

சர்க்கரை என்பது சுக்ரோஸின் எளிமையான வடிவமாகும், எனவே இது உடனடியாக இரத்தத்தில் உறிஞ்சப்பட்டு செயல்பட தொடங்கும். எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு இது பரிந்துரைக்கப்படவில்லை. மறுபுறம் வெல்லம், சுக்ரோஸின் நீண்ட சங்கிலிகளால் ஆனது, எனவே, இது மெதுவாக ஜீரணமாகிறது மற்றும் ஆற்றல் செயல் பாடுகள் மெதுவாக உள்ளது. எனவே, , அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. மேலும் இது ஒரு சுத்திகரிப்பு செயலியாக செயல்பட்டு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய் மற்றும் சுவாசக் குழாய்களை சுத்தம் செய்கிறது.

In reply to: Cooking Tips
rajasulochana
Participant
Posted on June 27, 2020 at 9:34 pm

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
==============================================================================================================
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
==============================================================================================================
அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.
==============================================================================================================
வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
==============================================================================================================
ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
==============================================================================================================
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
==============================================================================================================
காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.
==============================================================================================================
காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
==============================================================================================================
பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
==============================================================================================================
நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
==============================================================================================================
காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.
==============================================================================================================
சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
==============================================================================================================
சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
==============================================================================================================
முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
==============================================================================================================
கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.
==============================================================================================================
எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.
==============================================================================================================

In reply to: Manakkumsamayal welcomes you all
rajasulochana
Participant
Posted on June 27, 2020 at 5:05 pm

Thank you.

RegisterLost Password
Username
Password
Confirm Password
Email
Username or email