வாழை இலை மற்றும் பழங்களின் மகத்துவங்கள்

வாழை இலை யின் நீர் உறியாதன்மையாலும், வசதியாகயிருப்பதாலும் தென்னிந்தியா, பிலிப்பீன்சு, கம்போடியா உணவு வகைகள் பெரும்பாலும் இவ்விலையிலேயே பரிமாறப்படுகிறது. தமிழ் நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் முக்கிய விழாக்காலங்களில் வாழையிலையில் மட்டுமே உணவு பரிமாறப்படுகிறது.

உணவின் மணத்தை அதிகரிக்க வாழை இலை பயன்படுகிறது. பதார்த்தங்களுடன் வேகவைப்பதால் மெல்லிய சுவை கொடுக்கிறது. மேலும் உணவை மடித்துக் கட்டவும் பயன்படுகிறது. இலையில் உள்ள இயற்கை சாறு உணவை பாதுகாத்து சுவையையும் கூட்டுகிறது.

தமிழ் நாட்டில் இவ்விலையைக் காயவைத்தும் பயன்படுத்துகின்றனர். வாழைச் சருகு என்ற பெயரில் காய்ந்த இலைகள் உணவுக்கிண்ணங்களாக பயன்படுகின்றன. வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் உணவு வகைகளிலும் வாழை இலை கொண்டு பொட்டலம் போடப்படுகிறது.

வாழை இலை மற்றும் பழங்களின் மகத்துவங்கள்

 • வாழைப்பழம் பெரும்பாலும் அப்படியே உண்ணப்படுகிறது. அண்மையில், பாலுடன் கலந்து கூழாகவும் பருகப்படுகிறது.
 • பனிக்குழை (ice cream), குழந்தைகளுக்கான உணவு மற்றும் பழக்கலவைகளில் பயன் படுத்தப்படுகிறது. பழத்தை உலர வைத்து பொடியாக்கி, மாவுகளுடன் கலந்து பேக்கரி(வெதுப்பகம்) வகை உணவுகள் செய்யப்படுகின்றன.
 • வாழைப்பழத்தில் இயற்கையாகவே சுக்ரோஸ், குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் என்ற சர்க்கரை :இருப்பதால் தின்றவுடனே உடலுக்கு சக்தி கிடைக்கும். இது ஒன்றரை மணி நேரம் நாம் வேலை செய்யப் போதுமானதாகும்.
 • வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி-6 நரம்புகளைத் தளர்ச்சி அடைய விடாமல் செய்கிறது.
 • உள்ள ட்ரைபோடோஃபான் என்னும் ஒருவகை புரதம் நம் உடலில் சேரும்போது செரடோனின் என்ற பொருளாக மாறுகிறது. இது உடலைத் தளர்த்தி மனதை அமைதிப்படுத்தி மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
 • பொட்டாசியம் சத்து அதிகமாகவும், உப்பு சத்து குறைவாகவும் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவாகும்.
 • வாழைப்பழங்கள் 12 ‘C க்கும் குறைவான வெப்பநிலையில் கருக்கத் தொடங்கிவிடும்.
 • எனவே முழு வாழைப்பழங்களை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பது நல்லதல்ல. உரித்த வாழைப்பழங்களை காற்றுப்புகாதவாறு உறைகுளிர் பெட்டியில் நெடுநாட்கள் வைத்திருக்கலாம்.
 • வாழைக்காய் மற்றும் வாழைப்பத்தை மெல்லிய துண்டுகளாக சீவி, வாழைப் பொரிப்புகள் செய்யப்படுகிறது. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவை சமையலுக்கு பயன் படுத்தப்படுகின்றன.
 • வாழைத்தண்டு சிறுநீர் பாதையில் ஏற்படும் கற்களை நீக்க வல்லது என நம்பப்படுகிறது.
 • வாழை இலை இந்தியாவில் உணவு உண்ணும் தட்டு போல பயன்படுகிறது.
 • அறுவடைக்குப்பின் எஞ்சியிருக்கும் வாழைமரங்கள் வெட்டி நிலத்தில் சாய்த்து மக்க விடப்படுகின்றன. வாழை மரத்தண்டுகள் உரங்களை சேமித்து வைத்திருப்பதால், இவை நல்ல உரமாகப் பயன் படுகின்றன.
 • வாழைப்பூ, காய், தண்டு முதலியவை சித்த மருத்துவத்திலும் பயனாகிறது. நீரிழிவு என்ற உடற்குறை உள்ளவர்கள், வாழைப்பூ அவியலை உண்பது மிகவும் நல்லது.
 • வாழைப்பட்டைகளை உலர வேத்து அதிலுள்ள நார்களைப் பிரித்தெடுத்து மலர் மாலைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்துவர்.

மருத்துவ குணங்கள்

 • வாழைப்பூவை சமைத்துண்ணுவதால், நமது செரிமாண மண்டலம் முழுமைக்கும் மிக மிக நல்லது.
 • வாழைப்பழம் பசியை ஆற்றுவதோடு பல்வேறு மனித உபாதைகளுக்கு மருந்தாக இருக்கிறது.
 • குறிப்பாக மொந்தன் பழம் போன்றவை மலச்சிக்கலுக்கு நல்லது.
 • குழந்தைகளுக்கு சிறுவயதில் ஏற்படும் பல் விழும் காலங்களில் ஆடிக்கொண்டிருக்கும் பல்லை, பிடுங்குவதற்கு பதிலாக பெரிய அளவிலான வாழைப்பழம் (மொந்தன் அல்லது ரஸ்தாளி) போன்றவைகளை வலுக்கட்டாயமாக கொடுப்பர்.
 • பல் வாழைப்பழத்துடன் சேர்ந்து வயிற்றில் சென்று பிறகு மலத்துடன் வெளியேறிவிடும்.
 • தீப்புண்ணுக்கு வாழைமரத்திலிருந்து எடுக்கப்பட்ட சார் எரிச்சலை குறைக்கும். தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலை கொண்டு போர்த்துவது பல்வேறு இடங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது.
 • தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
 • நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும். உடலில் புதிய சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் உண்டாகும்.
 • தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.
 • சிறுவர், வாலிபர், வயோதிகர்களுக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி செவ்வாழை பாதியளவு முதல் முழு அளவு வரை தொடர்ந்து 21 தினங்களுக்குக் கொடுத்து வந்தாலே கண் பார்வை படிப்படியாகத் தெளிவடையும்.
 • பொதுவாக வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது. “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது.

Click here to check out website.

Check our Youtube Channel here

Facebook Comment