ஸ்டியூ சிக்கன்

2012-08-10
 • Yield : 2
 • Servings : 2-3
 • Prep Time : 20m
 • Cook Time : 30m
 • Ready In : 50m
Average Member Rating

forkforkforkforkfork (0.7 / 5)

0.7 5 10
Rate this recipe

fork fork fork fork fork

10 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

Ingredients

 • எலும்புடன் உள்ள சிக்கன் - 250 கிராம்
 • உருளைக்கிழங்கு - 1
 • தேங்காய் துருவல் - கால் மூடி
 • வெங்காயம் - 2
 • காரட் - 1
 • உப்பு - தேவையான அளவு
 • எண்ணெய் - சிறிதளவு
 • மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
 • பச்சை மிளகாய் - 2
 • கறிவேப்பிலை - சிறிதளவு
 • இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
 • கொத்தமல்லி இலை - சிறிதளவு

Method

Step 1

முதலில் கறியும், எலும்பும் சேர்ந்த துண்டுகளாக எடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

Step 2

பின்பு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வதக்கிய பின்பு கறியை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும்.

Step 3

கறி பாதி வெந்ததும் காரட், உருளைக்கிழங்கு போட்டு உப்பு, வெங்காயம் சேர்த்து மூடி வைக்கவும். பின்பு நன்றாக வெந்ததும் தேங்காய் துருவலை போடவும். கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும். ஸ்டியூ சிக்கன் ரெடி.

Close