மேகி போண்டா – Maggi Bonda

2012-08-30
 • Yield : 2
 • Servings : 2-3
 • Prep Time : 20m
 • Cook Time : 10m
 • Ready In : 30m
Average Member Rating

forkforkforkforkfork (1.7 / 5)

1.7 5 12
Rate this recipe

fork fork fork fork fork

12 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

In Tamil

Ingredients

 • வெங்காயம்-1 (சிறிதாக நறுக்கி கொள்ளவும்)
 • பச்சை மிளகாய் - 2
 • காரட் -1
 • பீன்ஸ் - 5
 • குட மிளகாய் - நறுக்கியது கொஞ்சம்
 • பச்சை பட்டாணி - கொஞ்சம்
 • உருளை கிழங்கு - கொஞ்சம்
 • எண்ணெய் - தேவையான அளவு
 • மேகி நூடில்ஸ் - சின்ன பாக்கெட்
 • கடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
 • உப்பு - தேவையான அளவு

 

Method

Step 1

முதலில் காரட், பீன்ஸ், உருளை கிழங்கு , பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கூக்கரில் இரண்டு அல்லது மூன்று விசில் விட்டு நன்கு வேகவைத்து கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், குட மிளகாய் மற்றும் வேக வைத்த அனைத்து காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மேகி நூடில்ஸ், மசாலாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.

Step 2

வேகவைத்த மேகி நூடில்ஸ்ஐ மற்றும் வதக்கிய காய்கறிகளை சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கையில் சிறது தண்ணீர் தடவி உருட்டினால் கையில் ஒட்டாமல் இருக்கும்.

Step 3

ஒரு வானலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி (பொரிக்கும் அளவுக்கு எண்ணையை எடுத்து கொள்ளவும்) மிதமான அளவில் எண்ணையை சூடுபடுத்தி கொள்ளவும்.

Step 4

கடலை மாவை / பஜ்ஜி போண்டா மிக்ஸ்ல் தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பையும் (குறிப்பு: பஜ்ஜி போண்டா மிக்ஸ்ல் ஏற்கனவே உப்பு சேர்ந்து இருக்கும்) சேர்த்து (பஜ்ஜி போடும் அளவிற்கு) ரெடி செய்து பின்பு உருட்டிய உருண்டைகளை அந்த மாவில் சேர்த்து காய்ந்த எண்ணெய் வானலியில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மேகி போண்டா ரெடி. இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

In English

Ingredients

 • Onion – Big 1 nos (Chopped)
 • Green Chilly – 2 nos (Chopped)
 • Carrot – 1 no (Cut in to pieces)
 • Beans – 5 nos (Cut in to pieces)
 • Potato – Small amount
 • Capsicum – Small amount chopped
 • Oil – as required
 • Green Peas – Small amount
 • Maggi Noodles – Small packet
 • Besan powder or Bajji/Bonda mix – as required
 • Salt as required

Method

Step 1

Using cooker boil Carrot, Beans, Potato, Green peas along with salt as required for 2 to 3 whistles. Using a pan add some oil as required and fry the onion along with green chillies, capsicum and also the boiled vegetables. Using another vessel boil the maggi along with masala.

Step 2

Mix the noodles along with fried vegetables and make it in to small balls. Use bit of water on your hands so that it won’t stick in to your hands while making in to balls.

Step 3

Using a deep pan, pour oil as required for fry and make it heated with medium flame.

Step 4

Make the Besan powder or Bajji/Bonda mix along with water and required salt and make it as batter as we do to make bajjis. Now dip the balls in the batter and make deep fry in the heated oil. Tasty Maggi Bonda is ready to serve now. Children will like this dish most. Try it out and let us know your comments.

Credit: Mrs. Deepa Ganesan.

Close