சிக்கன் பிரியாணி

2012-08-09
  • Yield : 3
  • Servings : 3-4
  • Prep Time : 15m
  • Cook Time : 30m
  • Ready In : 50m
Average Member Rating

forkforkforkforkfork (1.5 / 5)

1.5 5 15
Rate this recipe

fork fork fork fork fork

15 People rated this recipe

Related Recipes:
  • கடலை மாவு சாம்பார்

  • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

    சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  • கொத்தமல்லி தழை புலாவ்

    கொத்தமல்லி தழை புலாவ்

  • லெமன் பருப்பு ரசம்

    லெமன் பருப்பு ரசம்

  • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

Ingredients

  • வெங்காயம் - 3
  • தக்காளி - 1
  • பச்சை மிளகாய் - 7
  • இஞ்சி - 2 துண்டு
  • பூண்டு - 7 பல்
  • தயிர் - சிறிதளவு
  • எலுமிச்சை பழம் - பாதி
  • மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  • சிக்கன் - அரை கிலோ
  • அரிசி - 2 டம்ளர்
  • தேங்காய் துருவல் - பாதி மூடி
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு
  • புதினா - சிறிதளவு
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • எண்ணெய் - தேவையான அளவு
  • நெய் - 2 ஸ்பூன்
  • பட்டை - 2
  • உப்பு - தேவையான அளவு
  • லவங்கம் - சிறிதளவு
  • கிராம்பு - 2
  • இலை - 2

Method

Step 1

சிக்கனை நன்றாக அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை அறிந்து வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.அரிசியை கழுவி அரைமணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்.

Step 2

அதன் பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, லவங்கம், இலை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும். இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லி இலை, புதினா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போன்றவற்றை போட்டு வதக்க வேண்டும். அதன் பிறகு சிக்கனையும் அதில் போட்டு சுருள வதக்க வேண்டும். பின்பு அரிசியையும் போட்டு நன்கு கிளற வேண்டும். பிறகு தயிர் ஊற்ற வேண்டும்.

Step 3

எலுமிச்சை பழம் பிழிந்து ஊற்ற வேண்டும். கடைசியாக இரண்டு ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். பின்பு இரண்டு டம்ளர் தண்ணீரும், இரண்டு டம்ளர் தேங்காய் பாலும் ஊற்ற வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு போட்டு குக்கரை மூடி வைக்க வேண்டும். மூன்று விசில் வந்ததும் இறக்கவும். பிரியாணி வெந்ததும் குக்கரைத் திறந்து நன்கு கிளறி விட்டு சிறிது நேரம் கழித்து சாப்பிடவும். மிகவும் சுவையாக இருக்கும்.

Close