காய்கறிகள் பிரியாணி

2012-08-09
 • Yield : 3
 • Servings : 2-3
 • Prep Time : 15m
 • Cook Time : 20m
 • Ready In : 35m
Average Member Rating

forkforkforkforkfork (1.8 / 5)

1.8 5 18
Rate this recipe

fork fork fork fork fork

18 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

Ingredients

 • பாஸ்மதி அரிசி-400 gm
 • பெரிய வெங்காயம்-3
 • தக்காளி-3
 • பச்சைமிளகாய்-4
 • பீன்ஸ்-50 gm
 • காரட்-50 gm
 • பட்டாணி-50 gm
 • உருளைக்கிழங்கு-50 gm
 • தேங்காய்துருவல்-அரைமூடி
 • பட்டை-சிறிதளவு
 • ஏலக்காய்-2
 • லவங்கம்-சிறிதளவு
 • இலை-சிறிதளவு
 • கிராம்பு-சிறிதளவு
 • புதினா-சிறிதளவு
 • கொத்தமல்லி-சிறிதளவு
 • இஞ்சி- சிறிதளவு
 • பூண்டு-6
 • மிளகாய்த்துள்- சிறிதளவு
 • தயிர்-1/2 Cup
 • எலுமிச்சைபழம்-பாதி

Method

Step 1

பாஸ்மதி அரிசியை கொஞ்சம் நேரம் ஊறவைத்துகொள்ளவேண்டும். பின்பு இஞ்சி ,பூண்டு அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். தேங்கைதுருவளை அரைத்து தனியாக பால் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

Step 2

பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், லவங்கம், இலை, இவற்றை எண்ணெயில் போட்டு வதக்கவேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவேண்டும். கொஞ்சம் தயிர், எலுமிச்சைபழம் போட்டு அரிசியையும் போட்டு வதக்கவேண்டும்.

Step 3

பின்பு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, 2 டம்ளர் தேங்காய்ப்பால் ஊற்றி கொஞ்சம் உப்பு போட்டு கிளறி விட வேண்டும். பின்பு புதினா, கொத்தமல்லி போட்டு குக்கரை மூடி வைக்க வேண்டும். குக்கரில் 2 விசில் வந்ததுதும் இறக்கவும். பின்பு பிரியாணி வெந்ததும் ஒரு முறை கிளறி விட்டு பரிமாறவும்.பின்பு ருசியான, மனமான பிரியாணி தயார்.

Step 4

இதற்கு தயிரில் ஊறிய வெங்காயம், தக்காளி, காரட், பச்சைமிளகாய், உப்பு போட்டு சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

Close