உருண்டை குழம்பு

2012-08-09
  • Yield : 2
  • Servings : 2-3
  • Prep Time : 20m
  • Cook Time : 20m
  • Ready In : 40m

Ingredients

  • வெங்காயம்-2
  • தக்காளி-1
  • பச்சை மிளகாய்-4
  • துவரம் பருப்பு-100 கிராம்
  • பயித்தம் பருப்பு-100 கிராம்
  • கடலை பருப்பு-50 கிராம்
  • பெருஞ்சீரகம்-1 ஸ்பூன்
  • பூண்டு-4 பல்
  • கறிவேப்பிலை-தேவையான அளவு
  • புளி-2 எலுமிச்சை காய் அளவு
  • கொத்தமல்லி இலை-தேவையான அளவு
  • கருவடகம்-1 ஸ்பூன்
  • தேங்காய்த்துருவல்-அரை மூடி
  • உப்பு-தேவையான அளவு
  • சாம்பார் மிளகாய்த்தூள்-3 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்-6

Method

Step 1

துவரம் பருப்பு, பயித்தம் பருப்பு, கடலை பருப்பு இவை மூன்றையும் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, உப்பு, இவற்றை பருப்பு வகைகளுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தேங்காய் துருவலையும் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Step 2

பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கருவடகம் போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், போட்டு வதக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு புளியை தண்ணீரில் கரைத்து அதில் ஊற்ற வேண்டும். பின்பு சாம்பார் மிளகாய் தூள் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள பொருள் உடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையையும் போட்டு உருண்டைகளாக உருட்டி குழம்பில் போட வேண்டும். நன்றாக கொதித்ததும் இறக்கவும்.

Step 3

அரைத்த பொருளை உருண்டைகளாக உருட்டி இட்லி பானையில் வைத்து வேக வைத்தும் செய்யலாம்.

Average Member Rating

(1 / 5)

1 5 9
Rate this recipe

9 people rated this recipe

13,032

Related Recipes:
  • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

    சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  • கொத்தமல்லி தழை புலாவ்

    கொத்தமல்லி தழை புலாவ்

  • லெமன் பருப்பு ரசம்

    லெமன் பருப்பு ரசம்

  • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

  • இறால் தொக்கு | Prawns Thokku

Search Manakkumsamayal.com

Custom Search
Close
%d bloggers like this: